புதியத்தமிழகம் பிறந்தநாளை
ஏன் கொண்டாடுவதில்லை
?.
அவரவர் மொழி , பண்பாடுகளை
பேணுவதை யாரும் குறைச்சொல்வதில்லை.
ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தமிழ் ,
தமிழ்ப்பாண்பாடு பற்றி பேசினால் குற்றமாக
கருதப்படுகிறது.அறியாமையிலும்
மூடப்பழக்கவழக்கங்களில் ஊறிக்கிடக்கும் தமிழினம்
தப்பித்தவறி விழிப்படைந்துவிடக்கூடாது என்று
வந்தேறிகளும் தன்னலப்போக்காளர்களும்
தொடர்ந்து மறைமுகமாகமும் நேர்முகமாகவும்
தமிழ்நாட்டு மக்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.
இந்திய துணைக்கண்டத்தில்அனைத்திந்தியா சார்பாக
புத்தாண்டிற்கு விடுமுறை என்றால் அது உலக முழுக்க
வழக்கில் உள்ள கிறித்துவர் ஆண்டு சனவரி
ஒன்றுதான்.ஹிந்து சமயத்தவர் அனைவருக்கும்
ஒருமித்த புத்தாண்டு உண்டா? ஒவ்வொரு
மொழியினத்தவர் அதற்குறிய மாநிலத்தவருக்கு
ஒருமித்த புத்தாண்டு உண்டா?இல்லையே!
புத்தாண்டு பிறந்தால் புது வழி பிறக்கும் ,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதிலேயே தெளிவாகிறது
தை முதல் நாளே புத்தாண்டு முதல் மாதம் என்று.
மார்கழி கடைசி நாளை போ(க்)கி நாளாக அதாவது
பழையன கழிதலும்(போக்குதல்) புதியன புகுதலும் என்பதிலேயே
ஆண்டு இறுதி நாள் என புலனாகிறது.தமிழர் பண்ப்பாட்டு
வழக்கில் தை முதல் பொங்கல் நாளாகவும் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் எனவும்
 மூன்றாம் நாள் காணும்(கண்ணு)பொங்கல் எனவும் கொண்டாட்ப்பட்டுவருகிறது.
இன்றைப்பொழுதில் முற்காலத்தைவிட குறைவாகவே
உழுவதற்கு காளைகள் பயன்படுகிறது.எதிர்காலத்தில் இது மறைந்து போக கூடும்.
அப்பொழுது மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதும் நின்று போகும்.இனி தை முதல் நாள்
திருவள்ளுவர் ஆண்டு என்றாலும் அது மூன்றாம் நாளில் வைத்ததற்கு காரணம் ஏற்கனவே
பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.கானும் போ(க்)பொங்கல் என்பது பெண்கள்
தங்களுக்கு நல்ல கணவன்மார் அமைய பொங்கலிடுவதாக ஒரு மூடப்பழக்கமே.
அதனை தவிர்க்கவே வள்ளுவர் விழாவைக்கப்ப்ட்டது.ஏற்கனவே பல தமிழ் அமைப்புகள் திருவள்ளுவர் நாள் ,
 தமிழர் திருநாள் , பொங்கல் திருநாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறித்துவர் பிறந்தது திசம்பர் 25 என்றாலும் கிறித்துவர் ஆண்டு சனவரி முதல் நாள் ஹொடங்குகிறது.
தமிழினம் விழிப்படைந்திடக்கூடாது என்கிறவர்களும் மத மூடப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு களப்பிரர் ,பல்லவர் ,நாயக்கர்கல்,முகமதியர்கள்,மராட்டியர்கள் கைப்பற்றி
ஆண்டார்கள்.இவர்கல் ஆடிசியில் தமிழ் ஆட்சிக் கட்டிலில்லை.இடையில் ஒரு சில சோழர்கள்,பாண்டியர் ஆட்சி கட்டிலில்
இருந்தாலும் அவர்களும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.பிறமொழியினர் ஆட்சியில் இருக்கும்போதுதான்
புராண புரட்டுகள் பரவி தமிழ் மக்களை அலைக்கழித்தன.அதன் எதிர் பயன்தான் தமிழர்கள் அளவிற்கு அதிகமான
 மத மூடப்பழக்கத்திற்கு அட்மையாகி போயினர்.தமிழ்மொழி பற்றும் இல்லாதிருக்கின்றனர்.வந்தாரை வாழவைக்கும்
தமிழ்நாடு என்று பெயரளவில் வைத்துவிட்டு திராவிடர் என்ற போர்வையில் தமிழர்களை மதிமயங்க்ச்செய்துபிறமொழியினர்
தமிழ்தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக்கிவிட்டனர்.
ஆனால்தமிழர்கள் மாத்திரம் திரவிடர் என்று சொல்லிக்கொண்டு பிற மாநிலத்தில் ஆதிக்கமாக அல்ல
 ஒரு மனிதனாக கூடமதிப்பதில்லை.ஏனைய அண்டை மாநிலங்கள் நவ்ம்பர் முதல் நாளை தங்கள் மாநிலம்
பிறந்த் நாளை கொண்டாடும்போது தமிழ்நாட்டில் மாத்திரம் புதியத்தமிழகம் பிறந்தநாளை ஏன் கோண்டாடுவதில்லை?.
இதை சிந்திப்பீர் தமிழர்களே..இதற்கு விடை கிடைத்தால் தமிழ் ஆண்டு தை என்ப்தை மறுக்கும் சூட்சமம் விள்ங்கும்