தொல்காப்பியரின் 2874 ஆம் ஆண்டு பிறந்த நாள்
09.05.2009 அன்று தொல்காப்பியர் பிறந்த நாள்
” தொல்காப்பியர் காலம் ”
என்னும் நூலில் பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் தொல்காப்பியர் பிறந்த நாள் தி.மு.865 மேழவெள்ளுவா என முழுமனதுடன் வரையடுத்ததையிட்டு அதங்கோட்டாசான் பிறந்த குமரிமாவட்டத்து அதங்கோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்துத் தமிழாசிரியர் மன்றம் கொண்டாடி வருகின்றது.உலகெங்கும் வாழும் தமிழர் இனி தமிழ் மரபைக் காத்திடும் வண்ணம் தொல்காப்பியருக்கு எடுக்கும் விழா தமிழன்னைக்குப் புகழாரம் சூட்டுவதாக அமையும்.
0 comments Monday 11 May 2009 | thamizhankural | செய்திகள்


