Wednesday, 10 March 2010
பொன்மொழி
"நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்" - டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்
Author Archive

நோபல் வென்ற மூன்று தமிழர்கள்

Saturday, October 10th, 2009

அக்டோபர் 08,2009

வயவர்(சர்) சி.வி.இராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வரிசையில் சிற்றம்பலத்தை சேர்ந்த அறிவியலாளர் வெங்கட்ராம்ன் இராமகிருட்டிணனும் இடம்பெறுகிறார். இந்தியாவை சேர்ந்த அறிவியலாளர்கள் அரிதாகவே நோபல் பரிசு பெற்று வரும் வேளையில்,இராமகிருட்டிணன் பரிசு பெற்றிருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை.


தமிழ் சான்றோர் பிறப்பு

Monday, September 7th, 2009

மடங்கல்                                                 ஆகத்து

   4  ப.சீவானந்தம்                                         21

   9  தமிழ்த் தென்றல் திரு.வி.க.                 26

                                                                   செம்பதம்பர் 

  19  வ.உ.சிதம்பரனார் (1872)                         1

   20  சாலை இளந்திரையன் (1930)                6

    29  அண்ணா   (1909)

          மறைமலை அடிகள்                              15

     31  ஈ.வெ.ரா.                                                 17


Thursday, July 9th, 2009

தமிழுக்காக அரும்பணியாற்றிய வ.அய். சுப்பிரமணியம்  மறைந்தார்.

 

தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அரும்பணியாற்றிய தமிழ் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம் (82) மறைந்தார். தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழை முன்னிறுத்தி பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர். அவரது இழப்பு தமிழுக்கும், தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் பேரிழப்பாகும்.


திருமிகு முனைவர் திருமுருகன்

Wednesday, June 3rd, 2009

 

திருமிகு   முனைவர் திருமுருகன் ஐயா அவர்களின் திடீர் மறைவு

தமிழுக்கு மீண்டும் பேரிழைப்பைத் தந்துள்ளது.தன் வாழ்நாள் முழுவதும்

 தமிழுக்கு பாடாற்றிய முனைவர் திருமுருகன் போன்ற தமிழறிஞர்களை

வாழும் காலத்திலேயே அவர்களின் தகுதி , திறன்களை உடனுக்குடன்

தமிழின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதோடு அவர்களை மதிக்கப்படுவது என்பது

தமிழுக்கு ஆதரவாக தமிழாய்ந்த நற்றமிழ் உணர்வு நிறைந்த தமிழராச்சி

இல்லாதது தமிழரது பெருங்குறையே!.இனியேனும் இக்குறையினைக் களைய

திருமுருகனார் மறைவு நாளில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

திருமுருகனார் உற்றார் உறவினர் அவரின் பிரிவில் வாடும் அனைத்து

உள்ளங்களோடும் என் துயரினைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.


யாழ் நூலகம்

Sunday, May 31st, 2009

யாழ் நூலகம்
இன்று 31.05.2008 யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களால்
திட்டமிட்டு 31.05.1981 அன்று தீயிலிடப்பட்ட நாள்.
நூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்கள் தீக்கிரையாக்கிய நாள்.


கருப்பு நாள்

Thursday, May 21st, 2009

சிங்களக் காடையர்ளால் கொல்லப்பட்ட அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக!காயமுற்றும் மனத்தளவில் பாதிப்புக்கு ஆளாகியுமுள்ள எம்  தமிழர் அனைவரும்

விரைவில் ஆறுதலடைய விழைகிறேன்.


கரிய நாள்

Thursday, May 21st, 2009

இன்று எனை ஈன்ற தந்தை கே.பெருமாள் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள்.தங்கவயல் தமிழர் தலைநிமிர்ந்து வாழ அண்ணல் அம்பேட்கரின் வழிநின்று பாடாற்றியவர்.


உலகத்தமிழ்க்கழகம்

Tuesday, May 12th, 2009

உலகத்தமிழ்க்கழகம் புதிய பெறுப்பாளர்கள் தெரிவு
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தன் வாழ்நாள் முழுதும் ,தம் பல்மொழி நுண்ணறிவால் ஆய்ந்து தமிழ் எந்தவொரு மொழியின் துணையின்றி இயங்கவல்லது , தமிழே உலக முதன் மொழி என்பதனையும் தமிழன் பிறந்தகம் கடல்க்கோளினால் அழிந்துபட்ட குமரிக்கண்டமே என உலகத்துக்கு எடுத்தக் காட்டினார்.
வடமொழியிலும் எண்ணற்றத் தமிழ்ச்சொற்கள் உள்ளதனையும் மெய்ப்பித்துள்ளார்.
தன் வாழ் இறுதிவரை அவரின் மூச்சொலி தமிழ்த்தமிழென முழங்கியது.
ஆரியப் பார்ப்பனரின் தலைமையில் உருவான சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் சீர்கேட்டினை தன் தமிழ் அறிவாற்றலால் சுட்டிக்காட்டினார்.
” தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்பதுதான் பாவாணர் அடிக்கடி கூறுவார்.அதை செய்தும் காட்டினார்.
அவரின் நெடுநாள் குறிக்கோள் உலக அளவில் தமிழ்க் கழகம் ஒன்று அமையவேண்டமென்பதே!அந்த நல்ல எண்ணத்தில்தான் உலத்தமிழ்க்கழகத்தை
நிறுவினார்.நன்றாக வளர்ந்து செம்மொழிக்கு நல்ல ஆக்கங்களை எம் தமிழ்
மக்களுக்கு ஆற்றியது.ஆனால் உடனிருந்தவர்களில் வளர்த்தக்கடா மார்பில் பாய்ந்ததுபோல்
கழகத்தின் வளர்ச்சிப் பணிக்கு தடைக்கல்லானதால் அதில் தொய்வேற்பட்டுவிட்டது.
பாவாணரால் உணர்வூட்டப்பட்ட அவரின் பிறங்கடையாளர் கழக மீள்மேம்பாட்டின்
பொருட்டு உலகத்தமிழ்க்கழகம் புதுப்பொலியுடன்,புதுவலியுடன் விளங்கிட
நெய்வேலி அமைப்புக் கூட்டத்தில்(தி.க.2040 மீனம் உ (15.03.09)தமிழக,கருநாடகப்
பகுதியிலிருந்து உ.த.க வினர் கூடி புதிய பொறுப்பாளர்களைத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் :ந.அரணமுறுவல்
துணைத் தலைவர் :கதிர்.முத்தையன்
புதுச்செயலாளர் :தா.அன்புவாணன் வெற்றிச்செல்வன்
துணைப்பொதுச் செயலாளர் :கி.வெற்றிச்செல்வன்
பொருளாளர் :ஆ.நெடுஞ்சேரலாதன்
நெறியாள்கள :இரா. இளங்கமரனார்
பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா
பேராசிரியர் கு. பூங்காவனம்
தலைமை அலுவலகம் :726 , பாவார் தெரு , முல்லை நகர் ,
மேற்குத்தாம்பரம். . சென்னை -45

புதுவை , கருநாடகம் போன்ற பிற மாநிலங்களிலும் , வெளிநாடகளிலும்
கிளைகள் தோற்றறுவிக்க முடிவு செய்யப்பட்டது.
.

குறித்து : ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்க ஆத்திரேலியம் இன்னும் அனைத்து நாடுகளிலும் உ.த.க. கிளைகள் அமைக்க மேற்படி முயற்சியெடுப்பது அனைத்து தமிழர்களின் கடமையாகும்.உடனே தலைமை அலுவலகத்துடன் தெடர்புக்கொள்க!.
இவண்
ஆ.பெ.மணியரசன்


தொல்காப்பியரின் 2874 ஆம் ஆண்டு பிறந்த நாள்

Monday, May 11th, 2009

09.05.2009 அன்று தொல்காப்பியர் பிறந்த நாள்

தொல்காப்பியர் காலம் ” 

என்னும் நூலில் பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் தொல்காப்பியர் பிறந்த நாள் தி.மு.865 மேழவெள்ளுவா என முழுமனதுடன் வரையடுத்ததையிட்டு அதங்கோட்டாசான் பிறந்த குமரிமாவட்டத்து அதங்கோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்துத் தமிழாசிரியர் மன்றம் கொண்டாடி வருகின்றது.உலகெங்கும் வாழும் தமிழர் இனி தமிழ் மரபைக் காத்திடும் வண்ணம் தொல்காப்பியருக்கு எடுக்கும் விழா தமிழன்னைக்குப் புகழாரம் சூட்டுவதாக அமையும்


அன்னையர் நாள்

Monday, May 11th, 2009

அன்னையர் நாள்

நம்மிலும் மாறுப்பட் ட பண்பாட்டினரான வளர்ச்சியடைந்த நாடுகளில் அன்னையர் நாள்,தந்தையர் நாள்,குழந்தையர் நாள்,காதலர் நாள் இன்னும் எண்ணற்ற நினைவு,கேளிக்கையானக் கொண்டாட்டங்கள் இன்னும் பல நாடுகளில் கிறித்துவர் பிறந்த நாளை குடும்பம் இணையும் நாளாகவே கொண்டாடுகின்றனர்.எல்லாரும் எல்லா வசதிகளும் பெற்று வாழ்கின்றனர்.அதற்காக கடந்த இரண்டு உலகப் போரில் ஏற்பட்ட

அழிவிலிருந்து மீண்டு தங்களின் கடின உழைப்பால் மிக அலப்பரிய முன்னேற்றம் கண்டுள்ளனர்.அந்த உழைப்பில் எழுந்தருளிய இடங்களில் நம் திரைப்படத் துறையினர் அரைக்குறைய ஆடைகளில் தளுக்கு ஆட்டங்களை ஆடி படப்பிடிப்பு நடத்தி காசாக்குகின்றனர் நம்மவர்.அதைக் காணும் நாமும் அந்நாட்டிலுள்ளதை போல நம் நாட்டையும் செய்வோம் என்கிற எண்ணம் நமக்கு வருவதில்லை.ஆக, அது போன்று நாமும் நம் நாட்டிலுள்ள அனைவரும் ,அனைத்து வசதி பெறும் ஒழுங்குகள்,பொதுநலன் வசதிகள் முதலில் செய்ய முற்படுவோம்.அதன்பின் உலக வல்லரசு கனவு காண்போம்.ஏன் அதன் பின் வளர்ச்சியடைந்த நாடுகள் நம்மை ஏளனமாக பார்ப்பதை விடுவர்.நாட்டில் மக்கள் குடிசைகளில் வாழும் போக்கை மாற்றி ஏனையவர்கள் போல் நல்ல வீடுகளில் வாழும் வழி காண வேண்டும்.அதுவரை தேவையற்ற களியாட்டங்களை தவிர்ப்போம்.தவிர

அன்னையர் நாள் போன்ற அருமை நாட்களை முதன்மையாக மதிப்போம்,அரவணைப்போம்.போற்றுவோம்.ஆனால்

தமிழ் ஈழத்தில் இரண்டாயிரம் பெயர்கள் இன்று சிங்கள அரச படையினரால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி மனதைக் கலக்கமடைய வைக்கிறது.இதில் எத்தனை தாய்மார்களோ? எத்தனை தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள்,உறவுகளை இழந்தும்,அடிப்பட்டுள்ளதைப் பார்த்து கதறும் அந்த தாய் உள்ளத்தை நாம் எங்ஙனம்அமைதிப்படுத்தப் போகிறோம்.சிந்திக்க! உடனே செயல்படுக!

.பெ.மணியரசன்