27 ஆம் ஆண்டு நினைவு நாள்

தங்கவயல் கே.பெருமாள்
குமுகாய விடிவெள்ளி
முதன்முதல் பிராமணரின் குள்ளநரி குணத்தில் உருவான புராணப்புளுகு மூட்டைகள் மூலம்,வேதங்கள்,மதக்கட்டுப்பாடு
என்ற போர்வையில் மேல்சாதி,கீழ்சாதி,தீண்டப்படாதோர் என
மக்களை மாக்களாக ஆக்கி தன்னல உழைப்பிற்காக எம்மக்களை அறியாமையில் ஆழ்ந்திட வைத்தோருக்கு எதிராக எழுந்தவர்தான் பகுத்தறிவு பகலவன் புத்தர்.
அவருக்கு பின் புத்தர் காட்டிய பகுத்தறிவு கண்கொண்டு
தொல்குடித் தமிழரின் மீளெழுச்சிக்கு முதன்முதல் பாடாற்றியவர்தான் பண்டிதர் க.அயோத்தியதாசர் ஆவார்.
அவர் அதற்காக ” பைசா தமிழன்” ஏட்டை நடத்தி பகுத்தரிவு
கருத்துக்களை பரப்பி வந்தார்.பௌத்தச் சங்கங்களைத் தோற்றுவித்து மக்களை மக்களாக ஆக்கும் நற்பணியில் ஈடுப்பட்டார்.அதில் ஒன்றுதான் கோலார் தங்கவயலில் அவர்
திறந்து மாரிக்குப்பம்,சாம்பியன் பகுதி வைத்த பௌத்தச்சங்கங்களாகும்.அதை தலைமையேற்று நடத்தியவர்
பண்டிதமணி ஜி.அப்பாதுரையார்.பண்டிதரின் திடீர் மறைவுக்குபின் அவரின் பகுத்தறிவு ஏடான ” தமிழன்”இவரின் ஆசிரியர் பொறுப்பில் தொடர்ந்து தங்கவயலில் சித்தார்த்தர் அச்சகத்திலிருந்து வெளியாகி தமிழரின் பகுத்தறிவு கண்ணைத் திறந்தது.அவரின் மாணாக்கராக இருந்து,பின் அதே பௌத்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து பௌத்தக்கொள்கைதனையும்,அண்ணல் அம்பேட்கரின் குடியரசுக் கட்சியின் கொள்கைதனை தம் ஆற்றல்மிகு பேச்சால் ஆணித்தரமான சான்றுகள் மூலம் கருநாடகம்,தமிழகத்து பகுதிகள் இன்னும் வேம்பாய் வாழ் தமிழர்கள் இடையில் பகுத்தறிவினை பரவச்செய்தவர்தான் தங்கவயல் கே.பெருமாள் அவர்கள். தங்கவயலில் சாவு மேளத்திற்கு சாவுமணி அடித்தவர்,தங்கவயல் தொழிளாலர் நயன்மை கிடைத்திட தடையாய் இருந்த பொதுவுடமைக் கட்சிக்காரர்களிடமிருந்து தொழிற்சங்கத்தை மீட்டதில் தலைமைத் தாங்கி வென்றவர்.தங்கவயல் மக்களின் எதிர்காலத்தை தொலைநோக்குப் பார்வையில் சுரங்கத்தொழிலுக்கு மாற்றுத்தொழிலகம் வேண்டும் அதற்கு அன்று பஞ்சாப்/ஹரியானாவிற்கு போகயிருந்த பாரத மண்வாரி இயந்திரத் தொழிற்சாலை தங்கவயலுக்கு வர தண்டவாளத்தில் தலைவைத்து மறியலில் ஈடுப்பட்டு சிறைச்சென்றவர்.தங்கவயல் விளைத்துறைகளுக்கும் தலைமைத்தாங்கி ஊக்கப்படுத்திய இவரும் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். இப்படி இன்னும் பல நன்மைகளைதன்னல நோக்கமின்றி பதவி நாடாமல் வந்த பதவிகளுக்கு ஆசைக்கொள்ளாது மக்களோடு தானும் ஒருவனாக இருந்து இறுதி மூச்சுவரை கொள்கைப்பிடிப்பாளராக இருந்த இவரின் 27ஆம் நினைவு நாள் இன்று 22.05,2010.
0 comments Saturday 29 May 2010 | thamizhankural | Uncategorized
